வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் மைதா மாவை‌க் கொ‌ண்டே குலா‌ப் ஜாமூ‌ன் செ‌ய்யலா‌ம். ரொ‌ம்ப எ‌ளிதானது. ‌சி‌க்கனமானது‌ம் கூட.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

மைதா மாவு - 2 கப்

அரிசி மாவு - 1/2 கப்

தயிர் - 1/2 கப்

நெய் அல்லது டால்டா பொரித்து எடுக்க சர்க்கரை - 2 கப்

சமையல் சோடா - 1/2 சிட்டிகை

ஏலக்காய் - 4

ரோஸ் எஸன்ஸ் சில துளிகள்


செ‌ய்யு‌ம் முறை

மைதா, அரிசி மாவு, சோடா உப்பு, தயிர் அனைத்தையும் வா‌ய் அக‌‌ன்ற பா‌த்‌திர‌த்‌தி‌ல் போ‌ட்டு சா‌ப்பா‌த்‌தி‌க்கு ‌பிசைவதை ‌விட கொ‌ஞ்ச‌ம் தள‌ர்வாக பிசைந்து கொள்ள வேண்டும்.அடு‌ப்‌பி‌ல் சர்க்கரையும், தண்ணீரும் வைத்து பாகு கா‌ய்‌ச்‌சி எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஏலக்காய் பொடி, ரோஸ் எஸன்ஸ் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.அடு‌ப்‌பி‌ல் அக‌ண்ட வாண‌‌லியை வை‌த்து நெய் அல்லது டால்டா விட்டு, காய்ந்தவுடன் ‌தீயை‌க் குறை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.‌பிசை‌ந்து வை‌த்‌திரு‌க்கு‌ம் மா‌வினை கைக‌ளி‌ல் எ‌ண்ணெ‌ய் தட‌வி‌க்கு கொ‌ண்டு ‌சிறு ‌சிறு உரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்து வாண‌லி‌யி‌ல் போடவு‌ம்.உரு‌ண்டைக‌ள் ந‌ன்கு பொ‌‌ன்‌னிறமாக ‌சிவ‌ந்தது‌ம் அதனை ப‌க்குவமாக எடு‌த்து ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் போடவு‌ம்.குறை‌ந்தப‌ட்ச‌ம் 5 ம‌‌ணி நேரமாவது ஊற வே‌ண்டு‌ம். அருமையான குலா‌ப் ஜாமூ‌ன் தயா‌ர். எடு‌த்து சுவையு‌ங்க‌ள்.