மனிதனின் சுயனலத்திற்காக இயற்கையின் செயல்பாடுகளை மாற்றகூடிய ஒரு செயல் தான் இந்த கால்வாய்கள்,இந்த கால்வாய்கள் பெரும்பாலும் கடல்களின் மேல்தான் அமைக்கப்படுகின்றன.உலகில் மிகப்பெரிய கால்வாய் என அழைக்கப்படுவது "சூயஸ் கால்வாய்" இது எகிப்து நாட்டில் உள்ளது இதன் நீளம் 163 கி.மீ அகலம் 300மீ இதனது ஆழம் 12 முதல் 15 மீட்டர்.அதாவது பனாமா கால்வாயை விட இரண்டு மடங்கு பெரியது.இந்த கால்வாய் மெடிடெரேனியன் கலையும் ,செங்கடலயும் இணைக்கக்கூடியது பிரான்ஸ் நாட்டு பொறியாளர் 'லெப்ஸ்' என்பவர் தலைமையில் தான் இந்த பணிகள் நடந்தது,


இந்த கால்வாய் தோன்ட முக்கிய காரணம் என்னவென்றால் முன்பு எல்லா கப்பல்களும் ஆசிய நாடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் ஆப்பிரிக்காவை சுற்றிதான் செல்லவேண்டும் இதனால் மிக அதிக பொருட்செலவு, எரிபொருள் செலவு ஏற்பட்டது. இதன் காரணமாகவே இந்த கால்வாய் அமையப்பெற்றது. இதன் பின்னர் ஆசிய நாடுகளுக்கு எளிதாக செல்ல முடிந்தது, இந்த கால்வாய் வெட்டும் பணியில் எகிப்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து 1859ம் ஆண்டு தொடங்கின இந்த பணி சுமார் 11 ஆண்டுகள் நடைபெற்றன இபோது இந்த கால்வாய்வழியே ஆண்டுக்கு 14 ஆயிரம் கப்பல்கள் செல்கின்றன.இவற்றில் 14 சதவிகிதம் பல நாடுகளுக்கு செல்பவை அரபு நாடுகளிலிருந்து பெட்ரோலிய பொருள்களை எடுத்து செல்வதே இதன் முக்கிய பயன்பாடு.இந்த கால்வாயின் துயர சரித்திரம் ஒன்று உள்ளது அது என்னவென்றால் இந்த கால்வாய் அமைக்கும் பணியில் சுமார் 15 லட்சம் எகிப்தியர்கள் ஈடுபட்டனர் அவர்களுல் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பணி முடியும் முன்பே இறந்து விட்டனர்.இதை நினைத்து நிகழ்காலம் வியக்கிறது!