"தாமதிக்கப்பட்ட நியாயம் ஒதுக்கப்பட்டதற்கு ஒப்பாகும்"

"நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது."
-------------------------------------------------------------------------------------
”நாம் இந்தியாவுக்கு மிகவும்
கடன் பட்டுள்ளோம்.
எண்களைக் கொண்டு
எண்ணச் சொல்லிக்
கொடுத்தவர்கள் அவர்கள்தாம்.
அது இன்றி நாம்
மிகப்பெரிய அறிவியல்
கண்டுபிடிப்புகளையெல்லாம்
கண்டுபிடித்திருக்க இயலாது”
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
-------------------------------------------------------------------------------------
"நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை"
-கவிஞர் வைரமுத்து
-------------------------------------------------------------------------------------
"கற்றுக்கொள்ள வேண்டுமா?
முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!!
கற்றுக்கொள்வாய்!!!

பெற்றுக்கொள்ள வேண்டுமா?
முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!!
பெற்றுக்கொள்வாய்!!! "
-------------------------------------------------------------------------------------
"பேசும்முன் கேளுங்கள்,
எழுதுமுன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள் "
-------------------------------------------------------------------------------------
"எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
-------------------------------------------------------------------------------------