Mathuram Solutions
Computer Tips & Tricks

உங்கள் கணனியின் உயிர்ப்பூட்டும் பொத்தானைப் பலமுறை திருப்பித் திருப்பி அழுத்தினாலும் கணனி இயங்க மறுக்கின்றதா? அப்படியானால் இந்த கட்டுரையை தொடர்ந்து வாசியுங்கள். அல்லது வாசித்து வைத்துக் கொள்ளுங்கள் எதிர்காலத்தில் பயன்படும்.
இதை முதலில் சரி பாருங்கள்


கணனிக்கு மின்சாரம் வருகின்றதா என்று பாருங்கள். குறிப்பாக நீங்கள் இணைத்திருக்கும் Power Socket க்கு மின்சாரம் வருகின்றதா எனபதை வேறு சாதனங்களை இணைப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதைவிட கணனியின் பின் பக்கத்திலும் ஒரு ஆழி இருக்கும் அதுவும் இணைக்கப் பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.
ஒரு பீப் மட்டும் கேட்குது

வெவ்வேறு பயோஸ்களில் வெவ்வேறு முறைகளைக் கையாள்வர். ஆனால் பொதுவாக ஒரு பீப் சத்தம் கேட்டது என்றால் உங்கள் கணனியில் RAM ல் பழுது இருக்கலாம். சில பயோஸ்களில் இது 3 பீப்பாகவும் இருக்கும்.
1 நீண்ட பீப் 2 குறுகிய பீப்

உங்கள் வீடியோ கார்ட்டில் பிரைச்சனை உள்ளது.

மேலும் பல பீப் கோடுகளை அறிந்து கொள்ளுங்கள்
படிமுறைகள்

1. மின்சாரம் இணைப்பு சரியாக உள்ளதா என்று பரீட்சிக்கவும்
2. Power, Re-set பொத்தான்கள் செருகுப் பட்டுள்ளனவா என்று பரீட்சிக்கவும்
3. மொனிட்டர் பவர் பட்டன் ஆன் செய்யப்பட்டிருக்கின்றதா என்று பரீட்சிக்கவும்.
4. brightness and contrast போன்றவை கணனி திரையில் சரியாக இருக்கின்றதா என்பதையும் பார்க்கவும்.
5. கணனியில் இருக்கும் அனைத்து கேபிள்களையும் களற்றிவிட்டு (மொனிட்டர் மட்டும் இருக்க) மீள கணனியை இயக்கிப் பாருங்கள். கணனி இயங்கினால் ஒவ்வொரு சாதனமாகப் பொருத்தி எந்த சாதனம் பிரைச்சனை தருகின்றது என்று அறிந்து கொள்ளுங்கள்.

RAM என்றால் என்ன செய்யலாம்?

அனேகம் இந்த முறையைத்தான் பல Hardware திருத்தும் இடங்களிலும் பாவிப்பர். அதாவது கணனியின் வெளி உறையை அகற்றி உள்ளே உங்கள் றாம் மெமரியை களற்றுங்கள். பின்னர் கொஞ்சம் ஓடிக்கலோன் அல்லது ஏதும் சென்ட் (அல்ககோல்) தூவி ஒரு சுத்தமான துணியால் முன்னுள்ள உலோகப் பகுதியை துடைக்கவும். பின்னர் நன்கு உலர்ந்த பின்னர் மீள கணனியில் பொருத்தி கணனியை மீள இயக்கவும்.

பல வேளைகளில் மேலே குறிப்பிட்ட முறை பயன்தரக்கூடும் ஆனால் எப்போதும் பலன் தரும் என்று கூறுவதற்கில்லை.
VGA Card என்றால் என்ன செய்யலாம்

அனேகம் கணனிகள் இப்போது உள்ளமைந்த வீ.ஜி.ஏ கார்ட்டுகளுடன் வருகின்றது. ஆகவே கணனி ஆரம்பிக்கும் போது F2, Del, அல்லது உங்கள் மதர்போர்ட் ஆதரிக்கும் விசையை தட்டி பயோஸ் செல்லுங்கள் அங்கே உங்கள் உள்ளமைந்த VGA கார்ட்டை உயிர்ப்பூட்டுங்கள். பின்னர் மொனிட்டர் கேபிளை களட்டி ஒன் போர்ட் விஜிஏ வில் செருகி கணனியை மீள உயிர்ப்பூட்டுங்கள். புது கார்ட் வாங்கும் வரைக்கும் இவ்வாறு காலம் ஒட்டலாம்.

இங்கு நான் அறியத் தந்தவை வெறும் ஆரம்ப படிநிலை வழிகாட்டிதான். இதைவிட அதிகமாக அறிய இணையத்தின் துணையை நீங்கள் நாடலாம். அல்லது பயிற்றுவிக்கப்பட்ட ஒரு Hardware Technician துணையை நாடலாம். ஆர்வ கோளாரில் புரியாத விடையங்களில் கையைப் போட்டு அனைத்தையும் கெடுக்காமல் இருப்பது நலம் என்பது அடியேனில் கருத்து.
ஏதும் பிழை இருந்தால் அல்லுது எதையும் விட்டிருந்தால் பின்னூட்டப்பகுதியில் அறியத்தாருங்கள்.

 

The easiest way to read documents online

How to view files online without installing any special software?

Your friend has sent to you a special file. He is forcing you to open and read it. But you don't have the software application to read / view the file in your PC. Means You did not install the necessary application to read that kind of files in your PC. But he is forcing you to view it immediately.

What is the best idea to view those files?

Here is the alternative way to read some kind of files online. You do not need to install any application in your PC.



http://www.viewdocsonline.com/ site provides the service to do it. You need to upload the file in that site or you may give the URL address of the document file which already available on different web server.

Some other sites.

http://www.openitonline.com/

http://view.samurajdata.se/

 

படம்: 1 இந்த படத்தை நன்றாக பாருங்கள். இதில் மேலடுக்கில் உள்ள கேண்கள், இடதுபக்கமாகவும் (leftward), அதற்கு கீழே உள்ள அடுக்கு வலதுபக்கமாக (rightward) சுழலுவது போல தோண்றும்.



படம்: 2 இப்படத்துக்கு நான் சொல்லவே வேணாம், நீங்களே பாத்துகுங்க….



படம்: 3 சும்மா, பாருங்க எல்லா சக்கரமும் சுத்தும்.



படம்: 4 இதுவும் சுத்தல்ல விடுற படம்தான்.



படம்: 5 சுத்துதா? இல்லயா? பாத்து சொல்லுங்கப்பா?!


படம்: 6 உண்மையில் இதயம் நழுவதுங்கறது இதுதானா?



படம்: 7 நகருதா? பாருங்க?



படம்: 8 வண்டி நகருதோ? இல்லயோ? சக்கரம் சுத்துதூ பாருங்க…



படம்: 9 Final-a சுத்துல விடுற சைக்கிள்



படங்களை உற்று கவனிக்கவும்.









கணினி திரையின் முன் முன்னும், பின்னுமாக பார்க்கவும். ( Move your head towards and away from the monitor.)









 

கடைசியாக கணினியை ஷட் டவுன் செய்யும் வரை Windows XP நன்றாகவே வேலை செய்து கொண்டிருந்தது. இப்பொழுது கணினியை திறக்கையில் திரையில்



(OR)

Windows NT could not start because the below file is missing or corrupt:

X:\\WINNT\\System32\\HAL.dll

(OR)

NTLDR is Missing
Press any key to restart

மேற்கண்ட பிழைச்செய்தி தோன்றும், இது பலருக்கும் நேர்ந்திருக்கலாம். சரி ரீ ஸ்டார்ட் செய்து Safe mode -ல் சென்று பார்க்கலாம் என்றால் அதிலும் இதே பிரச்சனை.

இதற்கு பலரும் தேர்ந்தெடுக்கும் வழி விண்டோசை ரீ இன்ஸ்டால் செய்வது.

இதற்கு நான் உபயோகிக்கும் எளிதான வழிகளில் ஒன்று.,

Windows Recovery Console -ல் உபயோகிக்கப்படும் "BOOTCFG /Rebuild" என்ற கட்டளை ஒன்று உண்டு. இந்த கட்டளை விண்டோஸ் இயங்குதளம் துவங்குவதற்கு தடையாக உள்ள System File களை Remove/Replace/Repair செய்யும் பணியை Recovery Console -ல் செயல் படுத்துகிறது.

இந்த கட்டளை சரி செய்யும் கோப்புகள்..,

* Windows Hardware Abstraction Layer (HAL)
* Invalid BOOT.INI files
* A corrupt NTOSKRNL.EXE
* A missing NT Loader (NTLDR)
* Corrupt registry hives (\\WINDOWS\\SYSTEM32\\CONFIG\\xxxxxx)


இந்த கட்டளையை நாம் Windows Recovery Console -ல் தான் கொடுக்க முடியும் என்பதால், முதலில் REcovery console இற்கு செல்வது எப்படி என்று பார்ப்போம்.


Windows XP Booting CD ஐ உபயோகித்து கணினியை பூட் செய்து கொண்டு, கீழ்கண்ட திரை வரும்வரை தொடருங்கள்.



இந்த திரையில் 'R' கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.




மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,
1: C:\WINDOWS
(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)
இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).

இப்பொழுது திரையில்,

C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.


CD ..
ATTRIB -H C:\boot.ini
ATTRIB -S C:\boot.ini
ATTRIB -R C:\boot.ini
del boot.ini
BOOTCFG /Rebuild
CHKDSK /R /F
FIXBOOT




"Sure you want to write a new bootsector to the partition C: ?” என கேட்க்கப்படும் பொழுது 'Y' கொடுத்து என்டர் கொடுக்கவும்.

இறுதியாக கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும்.

 


நமது கணணியை வைரஸ் தாக்கினால் Task manager, registry editor, run dialog box போன்றவற்றை Disable ஆக்கிவிடும். இதனால் நாம் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிவரும்.
இவ்வாறு வைரஸ் இனால் பாதிக்கப்பட்ட கணணியில் Task manager, registry editor போன்றவற்றை Open பண்ணும் போது Error Message மட்டுமே வரும் உதாரணமாக Task manager ஐ Open பண்ணினால் "Task Manager has been disabled by your administrator" என்ற Error Message வரும்.

இவ்வாறு வைரசால் Windows XP இல் உண்டாகும் 25 பிரச்சனைகளுக்கான தீர்வு தான் XP Quick Fix என்ற இந்த சிறிய மென்பொருள்

இந்த சிறிய மென்பொருள் மூலம் பின்வரும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்

* Enable Task Manager
* Enable Registry Editor
* Stop My Documents open at startup
* Enable Folder Options
* Restore missing Run dialog box
* Enable Command Prompt
* Restore My Computer (Computer) properties
* Restore Device Manager
* Fix delay in opening Explorer
* Restore grayed Explorer and Taskbar toolbars
* Restore My Documents properties
* Remove OEM splash and wallpaper
* Restore My Network Places to Desktop
* Enable Recovery Console
* Restore grayed file associations
* Fix right-click error
* Fix slow network file/shared/remote
* Restore Network icon to system tray
* Fix slow hotkeys
* Fix CD/DVD drive is missing or not recognized
* Fix CD autoplay
* Restore "Send To" context menu item
* Restore the native ZIP file integration
* Fix error 1606 couldn’t access network location
* Error when trying to access Add or Remove/ Program and Features program

மேலுள்ள பிரச்சனைகளில் எதாவது உங்களுடைய கணணிக்கு இருப்பின் அதற்குரிய button ஐக் Click செய்வதன் மூலம் அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும்


மென்பொருளைத் தரவிறக்க: http://www.box.net/shared/2xi3hn7yyr

 

இது என்னுடைய 100 வது பதிவு. நான் படித்த, பார்த்த தகவல்களை இதுவரை பதிவுகளாக வெளியிட்டுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த நல் உள்ளங்களுக்கு நன்றி. மேலும் உங்கள் ஆதரவை எனக்கு வழங்க கேட்டுக்கொள்கிறேன் . இவன் கோபால்.

---------------------------------------------------------------------------------
இதுதாங்க தமிழகம் - 2040

2040 ஆண்டில் ஒரு நாளிதழில் கிடைத்த!!! முக்கியச் செய்திகள் இது. (எப்படி கிடைச்சதுன்னு மட்டும் கேட்காதிங்க)

1."வரும் ஜூன் 3ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளையொட்டி நியாய விலைக் கடைகளில் இட்டிலி சட்னி சாம்பார் வழங்கப்படும்" என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு.

2."அடுத்த ஆண்டு மார்ச்சு 3ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்குள் சென்னையின் அனைத்து சாலைகளும் மேம்பாலமாக்கப்படும்" என ஆண்கள் சுய உதவி குழுவினருக்கு சுழல் நிதி வழங்கி துனை முதல்வர் உதயநிதி பேச்சு.

3."மதுரையில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துகளுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என சிம்மக்கல் ஒத்தகடை மேம்பால திறப்பு விழாவில் மத்திய உரத்துறை அமைச்சர் அறிவுநிதி பேட்டி.

4.வடநாடு ஓய்வு முடித்து இன்று உடன்பிறவா சகோதரி கலாவுடன் சென்னை திரும்புகிறார் அ இ மா ம தி மு க (அனைத்திந்திய மானாட மயிலாட திராவிட முன்னேற்ற கழகம்) பொதுச் செயலாளர் திருமதி! குஷ்பு.

5.சத்தியமூர்த்தி பவன் சாக்கடை அடைப்பை சரி செய்ய ஆள் நியமனத்திற்கு அன்னை பிரியங்காவின் ஒப்புதல் பெற தமிழக காங்கிரசார் டெல்லி பயணம்.

6."தனது மகள்கள் இருவரும் இனி மத்திய அமைச்சரானால் முச்சந்தியில் நிறுத்தி மக்கள் என்னை திருக்கைவாலால் அடிக்கலாம்" பா ம க தலைவர் அன்புமணி பேட்டி.

7."இந்தியாவின் இரும்பு பெண்மணி குஷ்பூவால்தான் இலங்கைப் பிரச்சினையை தீர்க்க முடியும்" என ம தி மு க பொது செயலாளர் கோ வை(யாபுரி) பேச்சு.

8."காங்கிரஸ் தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி பற்றி பரிசீலிக்கப்படும்" என தேசிய பிற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜய் பேட்டி.

9."வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் 814 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி" இலட்சிய தி மு க தலைவர் விஜய சிலம்பரசன் அறிவிப்பு.

10."அரசியலில் இறங்குவது பற்றி காலம்தான் முடிவு செய்யும்" தந்திரன் பட இசைச் சுருள் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு.

 


நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்ட
இணையத்தின் வயது 40.நாற்பது ஆண்டுகளுக்கு முன்
இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கி
இன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.


இணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள்

1969 :
செப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில்
இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன.
இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும்.

1972:
Ray Tomilinson மின்னஞ்சலை மற்ற கணினிகளுக்கு அனுப்பும்
முறையை கண்டுபிடித்தார்.

1973 :
Arpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில்
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

1974 :
Viant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியான
TCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம்
உருவானது.

1983 :
வலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு வரப்பட்டது
".com".அடுத்த வருடங்களில் ".gov" and ".edu" அறிமுகபடுத்தபட்டது.

1988 :
இணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்கான
கணினிகள் சேதமடைந்தன.

1990 :
Tim Berners-Lee World Wide Web (WWW) உருவாக்கினர்.

1994 :
Andreessen மற்றும் குழுவினர் உலகின் முதல் கமர்ஷியல்
இணைய உலாவியான Netscape-ஐ உருவாக்கினர்.

1998 :
Larry Page and Sergey Brin கூகுளை உருவாக்கினர் Stanford பல்கலைகழகத்தில்.

1999 :
Napster ஒரு பெரும் புரட்சியை இசை கோப்புகளை பரிமாறுவதிலும்
வாங்குவதிலும் ஏற்படுத்தியது.

2000 :
இணைய தளங்கள் அதிகமாக தொடங்கியது.

2004 :
Mark Zuckerberg Facebook-ஐ உருவாக்கினர் Harvard பல்கலைகழகத்தில்.

2005 :
வீடியோ படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் Youtube உருவானது .

2007 :
Apple Iphone-ஐ வெளியிட்டது ,இதன் மூலம் லட்சகனக்கனர்வர்கள்
இணையத்தை உபயோகப்படுத்த தொடங்கினர்.

2008 :
Twitter உதயம்...

உலகம் முழுவதும் இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை:

1. China - 29.8 கோடி (22.4%)
2. USA - 22.7 கோடி (74.7%)
3. Japan - 9.4 கோடி (73.8%)
4. India - 8.1 கோடி (7.1%)
5. Brazil - 6.8 கோடி (34.3%)
6. Germany - 5.5 கோடி (67%)
7. UK - 4.8 கோடி (72%)
8. France - 4.1 கோடி (66%)
9. Russia - 3.8 கோடி (27%)
10. S.Korea - 3.7 கோடி (76%)
11. Australia - 1.7 கோடி (80.6%)

(Figures in brackets denotes percentage of nations population who use internet)

உலகம் முழுதும் இணையம் உபயோகிப்பவர்கள்:

1. 1999 - 2.5 கோடி
2. 2002 - 50 கோடி
3. 2006 - 100 கோடி
4. 2008 - 150 கோடி

நன்றி:Times of India

 



http://googlemyway.com/கு செல்லவும். அங்கே உங்கள் பெயரை பதிவு செய்து விடுங்கள் அவ்வளவுதான் இப்பொழுது நீங்களும் google தளத்தின் ஓனர் தான்(2 Minutes). உங்கள் பெயரில் google தளம் தோன்றும் மேலே இருப்பது tamizhdesam தளத்தின் google தளம்.

http://googlemyway.com/

 







August 15 1947 டெல்லியில் நடைபெற்ற முதல் சுதந்திர தின விழாவின் அரிய புகைப்படங்கள்

 

internet security company Norton Symantec has come up with a list of Top 100 Dirtiest sites, which could infect your computer with malware.

Malware is a software that can damage or compromise a computer system without the owner's consent.

Natalie Connor, spokeswoman of the anti-virus company, said that even visiting any of the named websites could expose a computer to infection and put the personal information into the hands of unwanted people.

"What people don't realise is when you type in a website, you're bringing down information on a page and with it could be malware," News.com.au quoted her as saying.

The list was compiled with the help of global data collected on Norton Safe Web, a site that analysed websites' security risks.

The infected sites had on average 18,000 threats and 40 per cent of the sites had more than 20,000 threats, while 75 per cent of websites on the list were found to be spreading malware for over six months.

According to Connor, most websites in the list had adult content with unprintable names, suggesting they contained hardcore pornography.

Some others sites include those on ice skating, deer hunting, catering and legal services.

Hackers can apparently obtain personal information using keystroke-logging software from both PCs and Mac computers.he reps said that hackers are a force to reckon with as cyber crime is increasing rapidly.

She added: "The last thing we want to do is scare people, we want to educate them so they know how to protect themselves.

"It's not about the fame any more of creating viruses and getting in the media. They're making money."

Norton released a sample of the dirtiest websites:

17ebook.com

aladel.net

bpwhamburgorchardpark.org

clicnews.com

dfwdiesel.net

divineenterprises.net

fantasticfilms.ru

gardensrestaurantandcatering.com

ginedis.com

gncr.org

hdvideoforums.org

hihanin.com

kingfamilyphotoalbum.com

likaraoke.com

mactep.org

magic4you.nu

marbling.pe.kr

nacjalneg.info

pronline.ru

purplehoodie.com

qsng.cn

seksburada.net

sportsmansclub.net

stock888.cn

tathli.com

teamclouds.com

texaswhitetailfever.com

wadefamilytree.org

xnescat.info

yt118.com (ANI)

 



பர்மாவில் எடுக்கப்பட்ட ,ஒரு அருவிக்கருகில் அமைந்த ,மலையடிவாரக் காட்சியை இந்தப் புகைப் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள். இதை எவரும் இலகுவாக எடுத்துவிட முடியாது. இந்தப் புகைப் படத்தை வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும், சூரியக் கதிர்கள் ஒரு குறித்த கோணத்தில் அந்த மலையில் படும்போது தான் எடுக்க முடியும். இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்று புரிகிறதா?
இப்போ உங்கள் தலையை இடது பக்கம் சரித்து , இந்தப் படத்தைத் திரும்பவும் பாருங்கள்........புரிகிறதா?
இதே படத்தை நான் நேராகத் திருப்பி இருக்கிறேன் பாருங்கள்.......

 

போபால் விஷவாயுத் துயரம்

கொடுங்கோலன் ஹிட்லரின் கொலைக்களம் (Gestapo Concentration Camp)

ஆட்சியாளர்களின் கொடூரம் காரணமாக பற்றியெரிந்த வியட்நாம் துறவி

யுத்தத்தின் சத்தம் வெட்கத்தைப் போக்கிய தருணம் - வியட்நாம் சிறுமி

நைஜீரியாவுக்கும் பயாபிரான் நாட்டுக்கும் ஏற்பட்ட போரினால் ஏற்பட்ட விளைவில் உருத்தெரியாதுப் போன குழந்தைகள்

சீனத் துயரம் - மாசடைந்த காற்று

சூடான் குழந்தையும் காத்திருக்கும் கழுகும். யார் ஜெயித்தார் தெரியவில்லை. இப்புகைப்படத்தை எடுத்து உலகின் அரிய விருதான புலிட்சர் விருதுப் பெற்ற புகைப்படக்காரர் கெவின் கார்ட்டர் துயரம் தாங்காமல், அடுத்த 3 மாதங்களில் தற்கொலை செய்துகொண்டார் என்பதுதான் துயரத்திலும் துயரம்..

சுனாமி 2006 - கடல் வாங்கிய காவு

உகாண்டா நாட்டுக் குழந்தையின் பரிதாபம்

ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சிற்கு சில நொடிகள் முன்பு

அணுகுண்டு வீச்சிற்கு பின்பு



குறிப்பு: இலங்கைக் கொடுமைகள் இன்னும் முழுதாக வரவில்லை என்பதால், தற்போதைக்கு இவை மட்டுமே உலகின் சோகப்படங்கள்!

 

தொட்டியில் நட்ட செடி மண் கெட்டியாக இருக்கும்வரைத்தான்னு தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தான் இல்லை. இங்கிலாந்தில் உள்ள கியூ கார்டனில் 234 வருடங்களாக ஒரு தொட்டிச் செடி வாழ்ந்துவருகிறது. இதுதான் உலகின் வயதான தொட்டிச் செடியாகக் கருதப்படுகிறது.. அதை சமீபத்தில் இடம்மாற்றி அமைத்தார்கள். அதற்கு ஒரு பாதிப்பும் இல்லாமல் இடம் மாற்றியதுப் பற்றியது தான் இச்செய்தி.
உலக தோட்ட ஆராய்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப் பரீச்சியமானப் பெயர் கியூ கார்டன்ஸ். உலகில் உள்ள அரிய செடி கொடிகள் எல்லாம் இங்கே பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் சைகாட் இனத்தைச் சேர்ந்த இந்த தொட்டிப் பனைமரம். இதனுடைய வளர்ச்சி மிகமிகக் குறைவானது. ஆனால் நீண்ட ஆயுள் கொண்டது.

சுமார் 234 வருடங்களில் 15 அடி உயரத்தை மட்டுமே தொட்டிருக்கும் இந்த தொட்டிப் பனை இருந்த தொட்டி தனது சக்தியை இழந்து மூச்சு முட்ட தொடங்கிவிட்டது. அது இடம் பெயர்ந்து 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்பதை தோட்டக்கலை நிர்வாகம் உணர்ந்தது.

கேப்டன் குக்கின் கடல் பயணத்தின் போது கிடைத்த இந்த தொட்டிப் பனை சுமார் 160 வருடங்களுக்கு முன் கியூ கார்டனுக்குள் நுழைந்தது என்கிறார்கள்.

மேலும் ஜூராசிக் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த அரியவகை தொட்டிப் பனையை கட்டிக்காப்பது தங்களது கடமை என்றுணர்ந்தவர்கள், அதை வேறு தொட்டிக்கு மாற்ற திட்டம் போட்டார்கள்.

சுமார் 3 மாதகால துல்லியமான திட்டத்திற்குப் பிறகு, 1000 கிலோ எடை கொண்ட இதை கடந்த 29 ஆம் தேதி 9 தோட்டக்காரர்கள் மற்றும் ஒரு கிரேன் உதவியுடன், வேறு தொட்டிக்கு பாதுகாப்பாக இடம் மாற்றினார்கள்.

கியூ கார்டன் தனது 250 வருட விழாவை தற்போது கொண்டாடி வருகிறது. அந்த வயதை நெருங்கப்போகும் தொட்டிப் பனையை வெற்றிகரமாக இடம் மாற்றி, அதன் சரித்திரத்தில் மற்றொரு பெருமையைத் தேடிக்கொண்டிருக்கிறது கியூ கார்டன் நிர்வாகம்.

 

By pressing x + # (where x is any number) will show the telephone number stored in that particular location.

For example, pressing 125 in idle mode and then pressing "#" later, will show the 125th number stored when the number are entered in your phone-book.


*3370#
Activate Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%

#3370#
Deactivate Enhanced Full Rate Codec (EFR) OR *3370# ( Favourite )

*#4720#
Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.

*#4720#
Deactivate Half Rate Codec.

*#0000#
Displays your phones software version,
1st Line : Software Version,
2nd Line : Software Release Date,
3rd Line : Compression Type. ( Favourite )

*#9999#
Phones software version if *#0000# does not work.

*#06#
For checking the International Mobile Equipment Identity (IMEI Number). ( Favourite )

#pw+1234567890+1#
Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).

#pw+1234567890+2#
Network Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).

#pw+1234567890+3#
Country Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)

#pw+1234567890+4#
SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w"and "+" symbols).

*#147#
(vodafone) this lets you know who called you last.

*#1471#
Last call (Only vodofone).

*#21#
Allows you to check the number that "All Calls" are diverted to

*#2640#
Displays security code in use.

*#30#
Lets you see the private number.

*#43#
Allows you to check the "Call Waiting" status of your phone.

*#61#
Allows you to check the number that "On No Reply" calls are diverted to.

*#62#
Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls are diverted to.

*#67#
Allows you to check the number that "On Busy Calls" are diverted to.

*#67705646#
Removes operator logo on 3310 & 3330
.
*#73#
Reset phone timers and game scores.

*#746025625#
Displays the SIM Clock status, if your phone supports this power saving feature"SIM Clock Stop Allowed", it means you will get the best standby time possible.

*#7760#
Manufactures code.

*#7780#
Restore factory settings.

*#8110#
Software version for the nokia 8110.

*#92702689#
Displays -
1.Serial Number,
2.Date Made,
3.Purchase Date,
4.Date of last repair (0000 for no repairs),
5.Transfer User Data.
To exit this mode you need to switch your phone off then on again. ( Favourite )

*#94870345123456789#
Deactivate the PWM-Mem.

**21*number#
Turn on "All Calls" diverting to the phone number entered.

**61*number#
Turn on "No Reply" diverting to the phone number entered.

**67*number#
Turn on "On Busy" diverting to the phone number entered.

 

மனிதனின் சுயனலத்திற்காக இயற்கையின் செயல்பாடுகளை மாற்றகூடிய ஒரு செயல் தான் இந்த கால்வாய்கள்,இந்த கால்வாய்கள் பெரும்பாலும் கடல்களின் மேல்தான் அமைக்கப்படுகின்றன.உலகில் மிகப்பெரிய கால்வாய் என அழைக்கப்படுவது "சூயஸ் கால்வாய்" இது எகிப்து நாட்டில் உள்ளது இதன் நீளம் 163 கி.மீ அகலம் 300மீ இதனது ஆழம் 12 முதல் 15 மீட்டர்.அதாவது பனாமா கால்வாயை விட இரண்டு மடங்கு பெரியது.இந்த கால்வாய் மெடிடெரேனியன் கலையும் ,செங்கடலயும் இணைக்கக்கூடியது பிரான்ஸ் நாட்டு பொறியாளர் 'லெப்ஸ்' என்பவர் தலைமையில் தான் இந்த பணிகள் நடந்தது,


இந்த கால்வாய் தோன்ட முக்கிய காரணம் என்னவென்றால் முன்பு எல்லா கப்பல்களும் ஆசிய நாடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் ஆப்பிரிக்காவை சுற்றிதான் செல்லவேண்டும் இதனால் மிக அதிக பொருட்செலவு, எரிபொருள் செலவு ஏற்பட்டது. இதன் காரணமாகவே இந்த கால்வாய் அமையப்பெற்றது. இதன் பின்னர் ஆசிய நாடுகளுக்கு எளிதாக செல்ல முடிந்தது, இந்த கால்வாய் வெட்டும் பணியில் எகிப்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து 1859ம் ஆண்டு தொடங்கின இந்த பணி சுமார் 11 ஆண்டுகள் நடைபெற்றன இபோது இந்த கால்வாய்வழியே ஆண்டுக்கு 14 ஆயிரம் கப்பல்கள் செல்கின்றன.இவற்றில் 14 சதவிகிதம் பல நாடுகளுக்கு செல்பவை அரபு நாடுகளிலிருந்து பெட்ரோலிய பொருள்களை எடுத்து செல்வதே இதன் முக்கிய பயன்பாடு.இந்த கால்வாயின் துயர சரித்திரம் ஒன்று உள்ளது அது என்னவென்றால் இந்த கால்வாய் அமைக்கும் பணியில் சுமார் 15 லட்சம் எகிப்தியர்கள் ஈடுபட்டனர் அவர்களுல் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பணி முடியும் முன்பே இறந்து விட்டனர்.இதை நினைத்து நிகழ்காலம் வியக்கிறது!