சுடிதார் வகைகள்
Posted In:
மகளிர் மட்டும்
.
By GOPALAKRISHNAN
தீபாவளிக்கு துணி எடுக்கச் சென்றால் அதிக நேரம் ஆகும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் துணியைத் தைக்கக் கொடுக்கவும் நேரம் ஆகிறது இப்போதெல்லாம்.
ஏன் என்றால் அத்தனை மாடல்கள் வந்துவிட்டன. எந்த மாடலில் சுடிதாரையோ, ஜாக்கெட்டையோ தைப்பது என்று முடிவெடுப்பது என்பது பெண்களுக்கு பெரும் பிரச்சினையாகிறது.
சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன.
ஆயத்த ஆடைகளின் மோகம் மெல்ல மெல்ல குறைந்து, தற்போது சுடிதார் துணிகள் எடுக்கப்பட்டு தங்களுக்கு வேண்டிய வகையில் தைத்து அணிகின்றனர் இளசுகள்.
அதிலும் தையல் கடைக்குச் சென்றால் ஒரு சுடிதார் தைப்பதற்கு எத்தனை விஷயங்களை முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.
முதலில் கழுத்து வடிவம். அதில் எத்தனை வடிவங்கள். எல்லா வற்றையும் பார்த்தால் நமக்கு மயக்கமே வருகிறது. அதில் ஏதாவது ஒன்றை முடிவு செய்த பின்னர் கட் வைத்ததா, இல்லையா என்ற கேள்வி. பேண்ட் மாடல் எப்படி என்று அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிக்கும் போது நாம் எப்படிப்பட்ட உடையைத் தைக்கச் சொல்லியிருக்கிறோம் என்றே புரியாமல் போய் விடுகிறது.
அத்தனை வகையில் மாடல்களும், வகைகளும் வந்துவிட்டன. புதிதாக வரும் மாடல்களைத்தான் இளசுகளும் விரும்புகின்றனர். அதனால் தாங்கள் தவறாக தைத்து விடும் பேன்டினைக் கூட மாடல் என்று அறிமுகப்படுத்தி விடுகின்றனர் தையல்காரர்கள்.
தற்போது இளசுகள் விரும்பி அணியும் வகையில் பஞ்சாபி மாடல்தான் முன்னணியில் உள்ளது. அதாவது இறுக்கமான, நீளம் குறைந்த டாப்சும், தொள தொள வென்ற பேண்டும் தான் பேஷனாகிவிட்டது.
அதற்கு அடுத்தபடியாக காலர் மாடல் அதிகரித்துள்ளது. காலர் வைத்த சுடிதாருக்கு என்ன விசேஷம் என்றால் துப்பட்டா அணியத் தேவையில்லை. மேலும் அதனை ஜீன்ஸிற்கும் போட்டுக் கொள்ளலாம்.
அப்படி இப்படி ஒரு சுடிதார் தைக்க எத்தனை ஆய்வுகள் நடத்த வேண்டி இருக்கிறது பார்த்தீர்களா?
0 Responses to சுடிதார் வகைகள்
Something to say?