மலாடு செய்முறை விளக்கம்.

தேவையான பொருட்கள்

பயற்றம் பருப்பு 1 கப்

உளுத்தம் பருப்பு 1/2 கப்

சக்கரை 1 கப்

ஏலம் 3 (பொடித்துக் கொள்ளவும்)

நெய் 4 ஸ்பூன்

முந்திரி 6 (வறுத்தது)

சுக்குப் பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை

1 . பயற்றம் பருப்பு, உளுத்தம் பருப்பு, இரண்டையும் சிவக்க வறுத்துக்கொள்ளவும்

2. சக்கரையையும் பொடித்துக் கொள்ளவும்

3. வறுத்த பருப்புகளை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

4. அரைத்த பருப்புகள், சக்கரைத் தூள், முந்திரி, சுக்கு, ஏலப்பொடிமுதலியவைகளில்நெய் விட்டுக் கொள்ளவும்.

5. அனைத்தையும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாகபிடித்துக்கொள்ளவும். மாலாடு தயார்.