மாங்காய் பருப்பு
நம்மூரில் மாங்காய் போட்டு சாம்பார் வைப்பது போன்று ஆந்திராவில் மாங்காய் பருப்பு மிகப் பிரபலம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் உணவு. எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
மாங்காய் - 1
துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு
பச்சை மிளகாய் - 2
சீரகம் - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
மஞ்சள் தூள் மிளகாய் தூள் கொத்துமல்லி பூண்டு - 2 பல்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்யும் முறை
நல்ல புளிப்புத் தன்மை கொண்ட மாங்காயாக பார்த்து வாங்கி அதனை சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். துருவிய மாங்காயை ஒரு கப் தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்து கொள்ளவும். பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு வேகவைக்கத் தேவையான தண்ணீர் ஊற்றி, அதில் மஞ்சள் தூள், பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து தனியாக வேக வைத்து கொள்ளவும்.
பருப்பு நன்கு வெந்ததும் அதனுடன் வேக வைத்த மாங்காயைப் போட்டு 5 நிமிடம் வேக விடவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு கடுகு வெடித்தவுடன், மிளகாய் தூள் சேர்த்து கிளரிவிட்டு அதில் வெந்த பருப்பைக் கொட்டிக் கிளறவும்.தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு, கொத்துமல்லி சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
0 Responses to மாங்காய் பருப்பு
Something to say?