ஏழை எ‌‌ளிய ம‌க்க‌ளு‌க்கு அ‌ன்றாட தேவையான அ‌‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்க‌‌ளி‌ன் ‌விலை கட‌ந்த 6 மாத‌ங்களாக வரலாறு காணாத வகை‌யி‌ல் உய‌ர்‌ந்து வரு‌கிறது. ‌விலை கொடு‌த்து வா‌ங்க முடியாமல் சராசரி வருவாய் உள்ள குடு‌ம்ப‌ங்க‌ள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அ‌ந்த அளவு‌க்கு அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்க‌ளின் ‌விலைகள் உய‌ர்‌ந்து‌ள்ளது.காய்கறி, பழங்கள், எண்ணெய், மளிகைப் பொருட்கள், பாலுணவுகள் என்று அனைத்துப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. அத்யாவசியப் பொருட்களின் விலைகள் கடந்த 6 மாதங்கிளில் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை முழுமையாக அறிந்துகொள்ள தமிழ்.வெப்துனியா.காம் நேரடி விவர சேகரிப்பில் ஈடுபட்டது. பல்வேறு பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

கா‌‌ய்க‌றிக‌ள் ‌விளை‌ச்ச‌ல் த‌மிழக‌த்தை ‌விட அதிகமுள்ள க‌ர்நாடகா‌வி‌ல் இருந்துதா‌ன் அ‌திக அ‌ள‌வி‌ற்குத் த‌மிழக‌த்‌தி‌ற்கு வரு‌கிறது (ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை ஏ‌ற்ப‌‌ட்டபோது கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டு‌க்கு குறை‌ந்த அள‌விலே கா‌ய்க‌றிக‌ள் வ‌ந்தது, இதனா‌ல் இத‌ன் ‌விலை அ‌திக அளவு உய‌ர்‌ந்தது). இப்படி சில சிக்கல்களால் விலையேற்றம் அவ்வப்போது ஏற்பட்டாலும், நிலைமை சீரடைந்ததும் விலைகள் குறைந்துவிடும். ஆனால், ஏறிய விலை (சில பொருட்களைத் தவிர) இறங்கவேயில்லை என்பது நமது நேரடி ஆய்வில் தெரிந்தது.கட‌ந்த 6 மாத‌த்தை பொறு‌த்தவரை இ‌ப்போது கா‌ய்க‌றி ‌விலைக‌ள் அ‌திகமாகவே இரு‌‌க்‌கிறது
எ‌‌ண்ணெ‌ய் ‌விலையை பொறு‌த்தவரை கட‌ந்த 6 மாத‌‌ங்க‌ளி‌ல் கடுமையாக ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது. த‌ற்போது ஒரளவிற்கே ‌விலை குறை‌ந்து‌ள்ளது எ‌ன்றாலு‌ம், ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌விலை வரலாறு காணாத அளவிற்கு ‌உய‌ர்‌ந்து‌ள்ளது. 6 மாத‌த்து‌க்கு மு‌ன்பு ஒரு ‌‌‌லி‌ட்ட‌ர் ரூ.70 ‌‌க்கு ‌விற்ற நல்லெண்ணெய், ‌திடீரென ரூ.70 உய‌ர்‌ந்து ரூ.140‌ ஆக உயர்ந்தது. த‌ற்போது ரூ.115‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.இ‌ந்த ‌விலை உய‌ர்வு‌க்கு காரண‌ம் ஆ‌ன் லை‌ன் வ‌ர்‌த்தகமே. இதனை தடை செ‌ய்தா‌ல் ம‌ட்டுமே அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைக‌ள் குறை‌யு‌ம் எ‌ன்று ‌வியாபா‌ரி ஜெக‌ந்நாத‌ன் கூ‌றினா‌ர்.கட‌ந்த 6 மாத‌ங்க‌ளி‌ல் அ‌த்‌தியாவ‌சிய பொரு‌‌ட்க‌ள் ‌விலை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது எ‌‌ன்பதை க‌ண்ட‌றிய தமிழ்.வெப்துனியா.காம் சந்தைக்குச் சென்று நேரடியாக விவரங்களைச் சேகரித்தது. கிழ்கண்ட ‌விலைகள் மொ‌த்த, ‌சி‌ல்லறை ‌வியாபா‌ரிக‌‌ளிட‌ம் நேரடியாக கேட்டு பெறப்பட்டதாகும்.முத‌லி‌ல் அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்க‌‌‌ளி‌ன் ‌விலையை பா‌ர்‌ப்போ‌ம்!
விலை நிலவரம் (அடைப்புக்குறிக்குள் 6 மாதத்திற்கு முந்தைய விலை)தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் - 1 ‌லி‌ட். ரூ.66.00 (ரூ.63.00)
கடலை எ‌ண்ணெ‌ய் - 1 லிட். ரூ.84.00 (73.00)
ந‌ல்லெ‌ண்ணெ‌ய்- 1 ‌லி‌ட். ரூ.115 (70.00)‌
விள‌க்கெ‌ண்ணை‌ய்- 1 ‌லி‌ட். ரூ.60 (63.00)
சூ‌‌ரியகா‌ந்‌தி எ‌ண்ணெ‌ய்- 1 ‌லி‌ட் ரூ.71 (81.00)
பாமா‌யி‌ல்- 1 ‌லி‌ட் ரூ.52 (65.00)
சோயா எ‌ண்ணெ‌ய்- 1 ‌லி‌ட் ரூ.60 (71.00)
கடுகு எ‌ண்ணெ‌ய்- 1 ‌லி‌ட் ரூ.72 (74.00)
வன‌ஸ்ப‌தி- 1 ‌கிலோ ரூ.60 (71.00)
தவு‌ட் எ‌ண்ணெ‌ய்- 1 ‌லி‌ட் ரூ.63 (74.00)
துவர‌ம் பரு‌ப்பு ஒரு மூ‌ட்டை (100 ‌‌கிலோ) ரூ.4,300 (3,900)
‌உளு‌த்த‌‌ம் பரு‌ப்பு (100 ‌‌கிலோ) ரூ.4,000 (3,600)
பரு‌ப்பு (100 ‌‌கிலோ) ரூ.3,800 (3,500)
கடலை பரு‌ப்பு (100 ‌‌கிலோ) ரூ.3,300 (3,000)
ச‌ர்‌க்கரை (100 ‌‌கிலோ) ரூ.1,400 (1,470)
கோதுமை (100 ‌‌கிலோ) ரூ.1,600 (1,460)
மைதா ஒரு மூ‌ட்டை (90 ‌கிலோ) ரூ.1,650 (1,400)
ரவை ஒரு மூ‌ட்டை (90 ‌கிலோ) ரூ.1,630 (1,530)
கோதுமை மாவு ஒரு மூ‌ட்டை (90 ‌கிலோ) ரூ.1,450 (1,400)
மளிகைப் பொருட்கள் (1 கிலோ கிராம் விலை):
வ‌த்த‌ல் ரூ.52 (66)
பூ‌ண்டு ரூ.24 (38)
பு‌‌ளி ரூ.48 (28)
ம‌ஞ்ச‌ள் ரூ.50 (55)
மு‌ந்‌தி‌ரி ரூ.210 (300).
த‌னியா ரூ.70 (50)
வெ‌ள்ளை கடலை ரூ.50 (40)
ப‌ட்டா‌‌ணி ரூ.28 (20)
வெ‌ள்ளை ப‌ட்டா‌னி ரூ.24 (18)
கடுகு ரூ.45 (35)
வெ‌ந்தைய‌ம் ரூ.40 (55)
ச‌ன் ‌ஃ‌பிளவ‌ர் ரூ.470 (505)
ஃ‌ப்ரூ ரூ.492 (550)
சே‌மியா ரூ.38 (32)
ஹா‌லி‌க்‌ஸ் ஒரு பா‌ட்டி‌ல் ரூ.128 (115)
கா‌‌‌ம்ப்ளா‌ன் ரூ.165 (180)
ஹமா‌ம் சோப் ரூ.17 (12)
பவ‌ர் ரூ.07 (5.50)
ல‌க்‌‌ஸ் ரூ.16 (14)
ரெ‌க்‌ஸ்சோனா ரூ.16 (13)‌
சி‌ந்தா‌‌‌‌‌ல் ரூ.21 (18)
‌ரி‌ன் ரூ.21 (18)
பவ‌ர் (கு‌ளிய‌ல் சோ‌ப்பு) ரூ.17 (14)
கா‌ய்க‌றி ‌விலைக‌ள் (ஒரு ‌கிலோ):நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.08 (20)
பெ‌‌ரிய வெ‌ங்காய‌ம் ரூ.07 (18)
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ரூ.20 (22)
க‌த்த‌ரி‌க்கா‌ய் ரூ.10 (10)
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.10 (17)
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.15 (25)
புடல‌ங்கா‌ய் ரூ.08 (15)
ஊ‌ட்டி கேர‌ட் ரூ.15 (15)
பெ‌‌‌ங்களூ‌ர் கேர‌ட் ரூ.08 (12)
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.18 (20)
பெ‌‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி ரூ.19 (18)
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.08 (14)
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.09 (05)
கோ‌ஸ் ரூ.04 (06)
பாக‌‌ற்கா‌ய் ரூ.09 (10)
மு‌‌ள்ளங்‌கி ரூ.08 (07)